மதுரையில் இளைஞர் மாரடைப்பால் மரணம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 21 June 2023

மதுரையில் இளைஞர் மாரடைப்பால் மரணம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்துள்ள குமார பகுதியைச் சேர்ந்த ஜான்சன் பிரபு (வயது 33).இவர் தனியார் டிராவல்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மாலை மதுரை பைபாஸ் சாலை வழியாக வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் ஓட்டி வந்த வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஓட்டுனர் இருக்கையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார். 

இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழு அவரை சோதித்த போது அவர் உயிரிழந்தது தெரிய வந்ததை தொடர்ந்து எஸ் எஸ் காலனி போலீசார் உடனே கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


No comments:

Post a Comment

Post Top Ad