

மற்ற பகுதியில் பொதுமக்கள் பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது. மேலும் புளியங்குளம் ஒத்தவீடு- கிண்ணிமங்கலம், மீனாட்சிபட்டி, தென்பழஞ்சி, மணப்பட்டி, வெள்ளப்பாரைபட்டி, சின்னசாக்கிலிபட்டி, அய்யனார்குளம், மீனாட்சி காலனி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, கீழப்புதூர் க.புதூர் முத்துப்பட்டி, நாகமலைபுதூர், அடைக்கம்பட்டி, ஓந்திமலை, டீச்சர்ஸ் காலனி போன்ற 18 கிராம மக்கள் மதுரை- போடி ரெயில்வே லைனை கடந்து, மதுரை - தேனி மெயின் ரோட்டுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.
இது குறித்து மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோரிடம் மதுரை - போடி ரெயில்வே லைனில் உள்ள சர்வீஸ் ரோடுகளை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து செக்கானூரணி வரை தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.
No comments:
Post a Comment