

மேலும் திமுக ஆட்சி அமைத்து மூன்று ஆண்டுகள் சாதனை என்று பெருமையாக கூறி வருகின்றனர் இதில் அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுக்கவில்லை தாலிக்கு தங்கமும் கொடுக்கவில்லை, நகை கடன் தள்ளுபடியும் சரிவர செயல்பாட்டில் இல்லை இப்படி பொய்மேல் பொய் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசு. இதற்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும். மேலும் இந்த உறுப்பினர் சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இளைஞர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு அதிமுகவில் வருங்காலத்தில் இளைஞர்கள் துணையுடன் ஆட்சியில் அமர வேண்டும் என்று சிறப்பு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், ஆண்டிச்சாமி வழக்கறிஞர் பிரிவு தமிழ்செல்வம், சுமதி சுவாமிநாதன், உச்சப்பட்டி செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment