

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை தாங்கள் படிக்கும் பள்ளி யின் தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் மதுரை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 27-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டிகள் நடைபெறும் அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவர்.
போட்டி களுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் சுசீலா செய்து வருகிறார். இந்த தகவல் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment