மதுரை மாவட்டம் திருவாலவாய நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் சந்தன கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 5 June 2023

மதுரை மாவட்டம் திருவாலவாய நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் சந்தன கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் அருள்மிகு ஸ்ரீ சந்தன கருப்புசாமி 21 தெய்வங்கள் 64 சேனைகள் நிறைந்த திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கடந்த 3ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் முதலாம் காலயாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. 


தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு மூன்றாம் கலா யாக பூஜைகள் நிறைவுற்று இன்று காலை 7 மணி அளவில் நான்காம் காலாக பூஜை நிகழ்ச்சிகள் விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது.   மகா பூர்ணாஹூதி நடைபெற்று கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சந்தன கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. 

தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீவராதனை கட்டப்பட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை அருள்மிகு காமாட்சி அம்மன் அருள்மிகு சந்தன கருப்புசாமி கும்பிடும் சந்தனம் அம்பலம் வகையறா, பெரியண்ணன் அம்பலம் வகையறா, காமாட்சி அம்பலம் வகையறா பங்காளிகள் மற்றும் பூசாரி நாயக்கர் வகையறா செய்திருந்தனர், சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad