சோழவந்தான் பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வைகை ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி பேரூராட்சி தலைவர் மேற்பார்வையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு வைகை ஆற்றினை, தூய்மைப்படுத்தும் சிறப்பு தூய்மை பனி முகாம் நடைபெற்றது.


இந்த சிறப்பு தூய்மை பணி முகாமினை, சோழவந்தான் பேரூராட்சி மன்றத் தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன் துவக்கி வைத்தார். வைகை ஆற்றினை தூய்மை படுத்திட பேரூராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரது பங்களிப்புடன் சிறப்பு தூய்மை பணி முகாம் நடைபெற்றது. வைகை ஆற்றில் குளிக்க வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் உபயோகத்தினை தவிர்த்து, குப்பைகளை முறையாக குப்பை தொட்டிகளிலும் அதற்கென நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களிலும் கொடுத்தால், குடிநீர் ஆதாரமான வைகை ஆற்றினை அடுத்து வரும் சந்ததியினரும் பயன்படுத்தலாம் சுற்றுச்சூழலை காப்போம் சுகாதாரம் பேணுவோம் என, சோழவந்தான் பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
No comments:
Post a Comment