

மேலும் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 1972 கிலோ உளுந்து ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 70 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 138040 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் தேங்கல்பட்டியை சேர்ந்த ஒரு விவசாயியின் தேங்காய் ஏலத்திற்கு வந்தது. அது காய் ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 6.10 க்கு விலைபோனது. இதன்மூலம் ரூ 5978 க்கு வர்த்தகம் நடைபெற்றது. இதுவரை திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 469 விவசாயிகளும் 93 வியாபாரிகளும் ஏலத்தில் பங்கு பெற்று அவுரி, கம்பு, மிளகாய்வற்றல், தேங்காய், உளுந்து, ஆமணக்கு விதை, இருங்குச்சோளம், கொப்பரை, கொத்தமல்லி, பருத்தி, காராமணி, பாசிப்பயறு, நிலக்கடலை பருப்பு, எள், குதிரைவாலி, மக்காச்சோளம்,நெல், புளி, துவரை, கேப்பை, சூரியகாந்தி விதை, வரகு, வெள்ளை துவரை அகிய வேளாண் விளைபொருட்கள் ஏலமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 937 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ 40042578 க்கு விற்பனை நடைபெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை 9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment