இந்த கோவிலின், கும்பாபிஷேக விழா 19ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், கோ பூஜை ,சுமங்கலி பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து, எந்திர ஸ்தாபனம், ஸ்தூபி வைத்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. 20ம் தேதி, பகவத் அணுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றது.


21-ம் தேதி சதுஷ்தான பூஜை, யாகசாலை பிரவேசம், யாகசாலை கும்ப பூஜை, பாராயணம், 1-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 2-ம் கால யாக பூஜை, கும்ப பூஜை நடைபெற்றது. 22 ம் தேதி மூன்றாம் கால யாகசாலை பூஜை, பிரதான ஹோமம் பரிவார ஹோமம், சகல திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கலச புறப்பாடு நடைபெற்று 9.35 மணி முதல் 10.15 மணிக்குள் கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், தேவி கருமாரியம்மனுக்கு பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment