

இந்நிலையில், பதவி கிடைக்காத ஆத்திரத்தில் ஒரு சிலர் பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். மதுரை பாஜக பெண் கவுன்சிலர் பூமா ஜனா ஸ்ரீ முருகன் தனக்கு விரும்பிய பதவி கிடைக்காததால், திமுகவினர் தூண்டுதலின் பேரில், மதுரை மாநகர் பாஜக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார். அவரது, குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் கிடையாது. இதுபோன்று இளங்கோமணி, என்பவர் பணம் வாங்கிக் கொண்டு பதவி அளித்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். அவரது குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் கிடையாது.
இது தொடர்பாக, அவர்கள் இருவர் மீதும் மாநில தலைமை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். அந்த அறிக்கையின் பேரில் மாநில தலைமை விரைவில் தக்க முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, துணைத் தலைவர் ஜோதி மணிவண்ணன் ,பொதுச் செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், ஊடகப்பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment