வாடிப்பட்டி தென் மாவட்ட ஆக்கி போட்டி: வாடிப்பட்டி எவர் கிரேட் அணி சாம்பியன் பெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 23 May 2023

வாடிப்பட்டி தென் மாவட்ட ஆக்கி போட்டி: வாடிப்பட்டி எவர் கிரேட் அணி சாம்பியன் பெற்றது.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், எவர் கிரேட் ஹாக்கி கிளப் நடத்தும் ராமர் நினைவு ஆறாம் ஆண்டு ஆண்டவருக்கான தென் மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் வாடிப்பட்டி எவர்கிரேட் அணி சாம்பியன் பெற்றது.

இந்த போட்டியில், மதுரை தென்மண்டல போலீஸ் அணி, எச்.டி.டி.சிஅணி,  திருநகர் ஹாக்கி கிளப் அணி, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக அணி, வாடிப்பட்டி எவர்கிரேட் காக்கி கிளப் அணி, மதுரை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, விருது நகர் ரெட் ரோஸ் ஆக்கி கிளப், மதுரை ஜி.கே மோட்டார்ஸ் அணி, கோவில்பட்டி ஹாக்கி திறன் மேம்பாட்டு மைய அணி ஆகிய அணிகள் விளையாடின.


இதன், இறுதி போட்டியில் எவர்கிரேட் ஆக்கி கிளப் அணியும், மதுரை ஜி.கே. மோட்டார்ஸ் அணியும் மோதின. இதில், 2:2 என்ற கோள் கணக்கில் சமநிலை பெற்றதால் டைப் பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டு விளையாடியதில் எவர்கிரேட் ஹாக்கி கிளப் அணியினர் ஜி.கே. மோட்டார்ஸ் அணியினை,  6:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது.


இதன் பரிசளிப்பு விழாவிற்கு, பேரூராட்சித் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கி சுழல் கோப்பை மற்றும் ரொக்க பணம் பரிசு வழங்கினார். இதில், மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் ஏ.ஜி. கண்ணன், ராமர் நினைவுகுழுத் தலைவர் பெத்துராஜ், மாநகராட்சி செயற்பொறியாளர் பாஸ்கர பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


முடிவில், உதவி செயலாளர்  ராஜா நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர்கள் பி.ஜி. ராஜா, வெள்ளைச்சாமி, சந்திர மோகன், செந்தில் குமார், எவர்கிரேட் ஹாக்கி கிளப் உறுப்பினர்கள் சரவணன், ராமசாமி, காளிதாஸ், சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad