பாராளுமன்றத்துக்கு ஆன்மீகவாதியை கூப்பிட்ட ஒரே பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும் - மதுரை ஆதீனம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 28 May 2023

பாராளுமன்றத்துக்கு ஆன்மீகவாதியை கூப்பிட்ட ஒரே பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும் - மதுரை ஆதீனம்.


பாராளுமன்றத்துக்கு ஆன்மீகவாதியை கூப்பிட்ட ஒரே பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். ஓதுவார் மூர்த்திகளை தேவாரம் பாட வைத்து செங்கோலை நிறுவி இருக்கிறார்கள். புதுடெல்லி: புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது:- 

இதுவரை இருந்த பிரதமர்கள் ஒருவர் கூட எங்களை பாராளுமன்றத்துக்கு அழைக்கவில்லை. நாங்களும் வந்ததில்லை. நாங்கள் எம்.பி.யும், ஆகாமல் எந்த கட்சியிலும் சேராமல் இங்கு வந்து இருக்கிறோம். பாராளுமன்றத்துக்கு ஆன்மீகவாதியை கூப்பிட்ட ஒரே பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். ஆதீனங்களை பாராளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை வரவழைத்து பெருமைப்படுத்தினார்கள். ஓதுவார் மூர்த்திகளை தேவாரம் பாட வைத்து செங்கோலை நிறுவி இருக்கிறார்கள்.தமிழர்களை பாதுகாத்ததற்காக நானும் ஒரு செங்கோலை கொடுத்துள்ளேன். பிரதமர் மோடி பல்லாண்டு காலம் வாழ வேண்டும். 2024 பாராளுமன்றத் தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகி இந்த நாட்டை வளப்படுத்த வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். அவருக்கு வாழ்த்துகளையும் ஆசியையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


பிரதமர் மோடி அனைத்து ஆதினங்களிடமும் அன்பாக நடந்து கொண்டார். மரியாதை கொடுத்தார். எல்லோரிடமும் பேச அவருக்கு நேரம் இல்லை. செங்கோல் கொடுப்பது தவறு அல்ல. அந்த காலத்தில் ராஜராஜ சோழன் செங்கோல் வைத்து இருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் செங்கோல் ஆதீனமே உள்ளது. அரசர்கள் வரும் போது செங்கோல் கொடுப்பது வழக்கம்தான். இதில் மன்னராட்சி, மக்களாட்சி என்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தது. இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad