இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கி தொடங்கி வைத்தார் மேலும் புதிய உறுப்பினர் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றியதாவது
இன்று தலைநகர் டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாரதப் பிரதமர் எடப்பாடி யாரின் நல்வாழ்த்துக்களோடு இன்று திறக்கிறார் நேற்று செங்கோல் தருகிற காட்சி இன்று செங்கோல் புதிய நாடாளுமன்ற நிரந்தரமாக வீற்றிருக்கிறது என்றால் அன்னை தமிழகத்தின் மக்களுடைய பாரம்பரிய கலாச்சாரம் வீரம் உலகறிய செய்கின்ற நாள் தான் இன்று 28ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் அவர்கள் வாழ்த்துச் செய்தியை பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு கொடுத்திருக்கிறார்
எடப்பாடியார் வாழ்த்து செய்தி கூறியிருக்கிறார் என்று சொன்னால் தனிப்பட்ட முறையில் சொல்லப்பட்ட வாழ்த்து செய்தி அல்ல 8 கோடி பேரின் சார்பாக தான் தெரிவித்த வாழ்த்து செய்தி சில எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றனர், மே 28 என்பது சர்வதேச பட்டினி தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது இந்த உலகத்தில் எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் இந்த நாட்டில் யாரும் பட்டினி கிடக்க கூடாது இந்த பட்டினி தினத்தை கடைப்பிடிக்கின்றனர் உலக நாட்டில் 80 கோடி பேர்கள் ஒவ்வொரு நாளும் பட்டினி கிடப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.


இந்திய திருநாட்டில் 22 கோடி பேர் பட்டினி கிடப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கப்படுகிறது அன்னை தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பின்பு 2 கோடியே 18 லட்சம் பேர்களுக்கு விலையில்லா அரிசி கொடுத்தவர் அம்மா அவர்கள் தமிழ்நாட்டில் பசி பட்டினி என்ற வார்த்தை கிடையாது புரட்சித்தலைவர் மாணவர்களுக்கு பசி பட்டினியை போக்குவதற்காக சத்துணவு திட்டம் தந்தார் ஆனால் அம்மா அவர்கள் 20 கிலோ விலையில்லா அரிசி, அம்மா உணவகத்தை கொண்டு வந்தார் அதில் மானிய விலையில் உணவு வழங்கினார் எடப்பாடி யார் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கொரோனா காலத்தில் அம்மா உணவகத்தில் உழைக்கிற தொழிலாளர்களுக்கு லட்சக்கணக்கான கோடிக்கணக்கான பேருக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கி பசிப்பிணி போக்கிய மக்கள் தலைவராக ஒரே தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் மக்கள் பசி பட்டினி போக்குவதற்காக கொடுத்தார் வறுமை இருக்கக் கூடாது என்பதற்காக தான் இந்த பட்டினி தினத்தை கடைப்பிடிக்கிறார்கள்,
ஆனால் மக்களின் வறுமை போக்குவதற்காக திட்டங்களை தந்தவர்கள் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி எடப்பாடியார் அவர்கள் அதனால்தான் இன்று முக்கியமான நாள் ஆளுநர் இடத்தில் கள்ளச்சாராய சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் 30,000 கோடி கொள்ளை அடித்ததற்கு நீதி கேட்க வேண்டும் சிபிஐ விசாரணை வேண்டும் இதற்கெல்லாம் பொறுப்பேற்று முதல்வர் மு க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சித் தலைவர் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு முழுதும் திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் தார்மீக பொறுப்பேற்று முக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தமிழர்கள் அதிமுக தொண்டர்களும் நாடு முழுவதும் கண்டன முழக்கம் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யவில்லை என்றால் இந்த தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் தமிழக மக்கள் உரிமை குரல் எழுப்புகிறார்கள் செந்தில் பாலாஜி கூறுகிறார் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கே தகுதி இல்லை என்று ஆமாம் உங்களை மாதிரி பொய் பேச தெரியாது தாலி அறுக்க தெரியாது எங்களுக்கு தெரிந்ததெல்லாம் மக்கள் தொண்டு மகேசன் தொண்டு அம்மா அவர்கள் சொன்ன தாரக மந்திரத்தின் படி உழைக்க தெரியுமே தவிர உலை வைக்க தெரியாது எங்களுக்கு எடப்பாடியார் அவர்கள் நிரந்தர பொதுச் செயலாளர் மக்கள் பேராதரவோடு முதலமைச்சராக அரியனில் அமர்வார் என சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment