மதுரை மாவட்டம் திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள சாத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் இன்று காலை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதுபற்றி பொதுமக்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவர் பிணத்தை மீட்டனர். விசாரணையில் ஊரணியில் மூழ்கி பலியானவர் சாத்தங்குடியைச் சேர்ந்த அய்யர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:
Post a Comment