செந்தில் பாலாஜியை நீக்கும் வரை அ.தி.மு.க போராட்டம் தொடரும் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.,பேச்சு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 29 May 2023

செந்தில் பாலாஜியை நீக்கும் வரை அ.தி.மு.க போராட்டம் தொடரும் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ.,பேச்சு.


செந்தில் பாலாஜி நீக்கும் வரை அண்ணா தி.மு.க போராட்டம் தொடரும் என, ஆர்.பி. உதயகுமார் பேசினார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக, கள்ளச்சாராய உயிரிழப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க அரசைக் கண்டித்து,  மு. க. ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட் டம் நடந்தது.

 

இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, பேரூர் செயலாளர் டாக்டர் கே.எஸ். அசோக் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் எம்.வீ. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சோணை, மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா வரவேற்றார். கவுன்சிலர் கே.எஸ்.இளங்கோவன், ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து, முன்னாள் அமைச்சர் மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- இந்த கண்டன பேரணியில், கொளுத்துகின்ற அக்னி நட்சத்திர வெயிலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலே கூடியிருக்கின்ற தாய்மார்களையும் உங்களை பார்க்கும் போது விடியாத தி.மு.க அரசின் மீதுள்ள வெறுப்பு வெளிப்படையாக தெரிகிறது.

 


திமுக அரசு வீட்டுக்கு போகும் நாள் எங்களுக்கு பொன்னான நாள். அண்ணன எடப்பாடி யார் அன்னைத் தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்கும் நாள்தான் பொன்னான நாள் என்று கூறுகிறார்கள். இந்த அரசு முசோலினி அரசாக, சர்வாதிகாரி அரசாக, வாரிசு அரசியலாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராய வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி நாள்தோறும் நடந்து வருகிறது. இதனால், இந்த அரசின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

 

இந்த விடியா அரசு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அனைத்து நலதிட்டங்களையும் முடக்கி வைத்து விட்டது. எந்தவித மக்கள் நலத்திட்டங்களும் தற்போது நடைபெறவில்லை. ஏழை எளிய சாமானிய மக்களிடமிருந்து கொள்ளையடித்து மு.க.ஸ்டாலின் தவபுதல்வன் உதயநிதி ஸ்டாலினும், மருமகன் சபரீசனும் 30 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்து எங்கே வைப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னது உதயகுமார் அல்ல, நான்கு தலைமுறைக்கு சொந்தக்காரர், நான்கு தலைமுறை இயக்க அரசியல் பங்கெடுத்த வர்கள் இந்த மதுரை மண்ணின் மைந்தர் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் படித்தவர் மிஸ்டர் கிளீன் என்று பெயர் பெற்றுவர் நம்முடைய அன்பு சகோதரர் பி.டி.ஆர் பழனி வேல் தியாகராஜன். அவர் சொல்லுகிறார் 30 ஆயிரம் கோடியை திராவிட முன்னேற்ற கழக குடும்பத்திலே அதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அதற்கு நீதி கேட்டு தான் கழக்கப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மேதகு ஆளுநர் இடத்தில் சென்று மனு கொடுக்கும் போது ஒரு 50 கார் பஸ்சை போலீசார்கள் நிறுத்தி வைத்தார்கள். ஏனென்றால் உங்களை எல்லோரும் கைது செய்யப் போகிறோம் என்று சொன்னால் பயந்து சென்று விடுவார்கள் என்று திட்டமிட்டு முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில் காவல்துறை ஏவல் துறை யாக பயன்படுத்தினார்கள். ஆனால், கடந்த வாரம் திங்கட் கிழமை தலைநகரம் சென்னையில் நடந்தது 50 ஆயிரம் கூடிட இருந்த கண்டன பேரணியில் போலீஸ் வாகனம் பூச்சாண்டி காட்டியதால் 5 லட்சம் பேர் அங்கு திரண்டு மாபெரும் சரித்திரத்தை எடப்பாடி யார் தலைமையில் படைத்து விட்டார்கள். 


காவல்துறை பூச்சாண்டிக்கு எல்லாம் அதிமுக என்றும் பயந்தது கிடையாது. அமைச்சர் செந்தில் பாலாஜி நிலையில்லாதவர் எல்லா கட்சிக்கும் சென்று வந்தவர். அவர் போகாத கட்சி இல்லை பத்து கட்சிக்கும் சென்று வந்தவர் தான் செந்தில் பாலாஜி. இன்றைக்கு விஷ சாராயம், கள்ள சாராயம் குடித்துவிட்டு 25 அப்பாவி உயிர்கள் பறிபோய் இருக்கிறது. இதை தட்டி கேட்கின்ற வகையிலே மு க ஸ்டாலின் ரோஷமுள்ளவராக இருந்தால் ஜப்பானிலிருந்து வருவதற்குள் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து விட்டு நீங்கள் இங்கே வருவதற்கு தயாரா என்பது இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.திமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள்  செந்தில் பாலாஜி வைத்துள்ளார் என்ற அவல நிலை ஸ்டாலினுக்கு தெரியுமா. விஷசாராயம் கள்ளச்சாராய ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. காரணமான அந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும். 


இன்று தமிழக முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கும் வரை அண்ணா திமுக போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவர் அவர் பேசினார். இந்த கூட்டத்தில், ஒன்றிய அவைத் தலைவர் ஆர்.எஸ்.ராமசாமி, பேரூர் பேரவை செயலாளர் தனசேகரன்,  மருதை யா,ரவி செல்வராஜ், பொன்ராம், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேரூர் துணைச் செயலாளர் சந்தன துரை நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad