அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வி த்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 29 May 2023

அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வி த்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம்.


திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரிட்டிஸ் காலத்தில் இரவு நேரங்களில் வீடுகளில் தங்காமல் சிறைச்சாலை மற்றும் பள்ளியாக செயல்பட்ட இடத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்கினர். அதே நிலையை தற்போது நாங்கள் தொடர்கிறோம். நிலக்கோட்டை: அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வி த்துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நிலக்கோட்டை, எம்.குரும்பபட்டி, ராமராஜபுரம், விராலிமாயன்பட்டி, தர்மத்துப்பட்டி, விருவீடு, அணைப்பட்டி, சொக்கு பிள்ளைபட்டி, எஸ்.மேட்டு ப்பட்டி, சிலுக்குவார்பட்டி உள்பட பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 


கருப்பு கொடி போராட்டம் அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அணைப்பட்டியில் கள்ளர் பாதுகாப்பு இயக்கமும், பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் பேசியதாவது: திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து வருகிற ஜூன் 15ந் தேதி முதல் அரசு கள்ளர் பள்ளிகளில் பொது மக்கள் தங்கும் போராட்டம் நடத்த உள்ளோம். எங்கள் முன்னோர்கள் கட்டிக்காத்த பள்ளியை காப்பாற்ற வேண்டும். 


பிரிட்டிஸ் காலத்தில் இரவு நேரங்களில் வீடுகளில் தங்காமல் சிறைச்சாலை மற்றும் பள்ளியாக செயல்பட்ட இடத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தங்கினர். அதே நிலையை தற்போது நாங்கள் தொடர்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad