இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, பா.ம.க. வன்னியர் சங்கம் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 29 May 2023

இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, பா.ம.க. வன்னியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.


வன்னியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலை விட்டு வெளியேற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி  , பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம், தேவேந்திரர் மக்கள் நலச்சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பாமக மற்றும் வன்னியர் சங்கம் தேவேந்திரர் மக்கள் நல சங்கம் சார்பில் தேவேந்திர குல வேளாளர்களை பட்டியலை விட்டு வெளியேற்றம் செய்ய வேண்டும்  மக்கள் தொகை அடிப்படையில் இட பங்கீடு வழங்கிடவும் வன்னியர்களுக்கான 10.5% இட  ஒதுக்கீட்டு ஆணையை உடனடியாக நிறைவேற்ற கோரியும், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் மற்றும் தேவேந்திரர் மக்கள் நலச் சங்கத் தலைவர் தேவேந்திரன்   தலைமையிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் பாமக பொருளாளர் திலகபாமா கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக மாவட்ட செயலாளர்கள் அழகர்சாமி, வீரக்குமார், பா.ம க மற்றும் வன்னியர் சங்கம் தேவேந்திர குல வேளாளர், தமிழர் தேசிய கழகம். மல்லர் பேரராயம். புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment

Post Top Ad