அதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ப தற்காக கூடுதல் நேரம் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற முடிந்த வரை முயற்சி எடுப்பார்கள். இந்த ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவ டைந்து பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியானது. அதனை மாணவ-மாணவிகள் தங்களது செல்போன்களிலேயே பார்த்து தெரிந்து கொண்டனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவி களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்கள் படித்த பள்ளிகளிலும் சக மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 63 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி னர். இதில் 19 ஆயிரத்து 190 பேர் மாணவர்கள். 18 ஆயிரத்து 823 பேர் மாணவி கள். இதில் 16 ஆயிரத்து 982 மாணவர்களும், 17 ஆயிரத்து 957 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 34 ஆயிரத்து 939 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.79 சதவீத தேர்ச்சி யாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை மாவட்டம் 18-வது இடத்தை பிடித்துள்ளது.
No comments:
Post a Comment