அப்போது போலீசாரை கண்டவுடன் காரை வேகமாக எடுத்துச் சென்றனர். பின் தொடர்ந்து சென்ற காவல்துறையினர் டி.அரசைப்பட்டி- கீழக்கோட்டை செல்லும் சாலையில் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்த இரண்டு பேர் தப்பி சென்றனர். போலீசார் காரை சோதனை செய்த போது அந்த காரில் துப்பாக்கி மற்றும் 111 தோட்டாக்கள் இரண்டு காலி கேஸ்கள் இருந்தது தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

மேலும் காரின் பதிவு எண்ணை கொண்டு அந்த கார் யாருடையது என்பது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த காருக்குள் திருமங்கலம் காளிமுத்து நகரைச் சேர்ந்த குமார் பாண்டியன் மகன் பாலகணேஷ் என்பவரின் ஆதார் அட்டை டிரைவிங் லைசன்ஸ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ரைபிள் கிளப் லைசென்ஸ் உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது அவற்றை கைப்பற்றிய போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment