கள்ளிக்குடி அருகே விபத்தில் லாரி மோதி கார் கவிழ்ந்தது. இதில் பெண் இறந்தார். 6 பேர் காயம் அடைந்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமங்கலம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே யுள்ள மாதங்கோவில் பட்டியை சேர்ந்தவர் ஜான்சாமுவேல். இவர் குடும்பத்தினருடன் காரில் ஈரோடு சென்று விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

நேற்று இரவு மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே சென்று கொண்டி ருந்தபோது பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் கார் நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அமிர்தம் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த ஜான்சாமுவேல், இறைநிலா, லில்லிபுஷ்பம், எர்ணாஸ், லியோன், டேவிட் ஆகியோர் படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment