மதுரையில், வெப்பச் சலனம் காரணமாக பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், மேலவாச வீதி, தெற்கு மாசு வீதி, கீழமாச வீதி உள்ளிட்ட மதுரை மாநகர் பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இதனால், சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் பூத வாகனத்திலும் மீனாட்சி அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்தனர்.

திடீரென பெய்த மழையால் மேற்கு கோபுரம் செல்லும் சாலையில் வழியாக கோவிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாமியின் வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டது.

No comments:
Post a Comment