திருமங்கலம் அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 25 April 2023

திருமங்கலம் அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் காந்திநகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் பிரதாப் (வயது 27). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார்.பெற்றோர் அது பற்றி கேட்டபோது உடல்நிலை சரி இல்லை என்று கூறியுள்ளார். 

அவர்கள் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது, தூக்கில் தொங்கியபடி பிரதாப் பிணமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதாப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad