திருமங்கலம் அருேக மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் கருகின. தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து எரிந்த தீயை அணைத்தனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 24 April 2023

திருமங்கலம் அருேக மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் கருகின. தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து எரிந்த தீயை அணைத்தனர்.


திருமங்கலம் அருேக கங்குராம்பட்டியை சேர்ந்தவர் அழகர். இவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் தென்னை மரங்கள், மல்லிகை செடிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு திருமங்கலம் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அழகர் தோட்டத்தில் உள்ள 2 தென்னை மரங்கள் மீது மின்னல் பாய்ந்தது. 

இதில் 2 தென்னமரங்களும் தீப்பற்றி எரிந்தன. மேலும் அங்கு வளர்க்கப்படும் மல்லிகை செடிகளும் கருகின. இதுபற்றி திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து தென்னை மரத்தில் எரிந்த தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வடகரை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு சேதம் குறித்து ஆய்வு செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad