இலவச மின்சாரங்களுக்கு மீட்டர் பொருத்தும் விடியா திமுக அரசு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 28 April 2023

இலவச மின்சாரங்களுக்கு மீட்டர் பொருத்தும் விடியா திமுக அரசு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு.


மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில், ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில், அதலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது;

இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்றைக்கு கழகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு, ஒன்றரை கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு,  அனைத்து நீதிமன்றங்களாலும், அங்கீகரிக்கப்பட்டு இருப்பவர் எடப்பாடியார் தான் என்பதை உறுதி செய்கின்ற வகையில், தோழமையிலே இருக்கிற தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் உள்துறை அமைச்சரை எடப்பாடியார் சந்தித்துள்ளார். இது ஒன்னரை கோடி தொண்டர்களுடைய மனதில் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. 


எடப்பாடியார்  மீண்டும் முதலமைச்சராக  தமிழகத்தில் வரவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிற, தமிழ்நாட்டு மக்களுக்கு வாராத  மாமனியாக வர பிரசாதமாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது. வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது. ஊடகங்களிலே விவாதிக்கிற கருத்துக்களை யூகங்களிலே அங்கே செய்திகளை பரப்புகிற அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


ஏனென்று சொன்னால் இன்றைக்கு நடைபெறுகிற திமுக அரசு ஒரு கையாளராக அரசாக, நிர்வாக குளறுபடியில் இருக்கிற அரசாக ஒட்டுமொத்த குளறுபடியினுடைய அடையாளமாக திமுக அரசு இருக்கிறது. திமுக தான் இந்தியாவிலே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசாகும். திமுக அரசுக்கு முடிவுரை எழுதுகிற வகையில் தான் எடப்பாடியார் பாரதிய ஜனதா கட்சியினுடைய மூத்த தலைவர் அமித்ஷாவை  சந்தித்துள்ளார்.



முதன் முதலில் இலவச மின்சார திட்டத்தை புரட்சித்தலைவர் கொண்டு வந்தார். அதனை தொடந்து அம்மா 100 யூனிட் வரை இலவசம் மின்சார வழங்கினார். 500 யூனிட் மின்சாரம் சகாய நிலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களுக்கும் மின்சாரம் மான்யமாக வழங்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் இலவச மின்சாரமாக 23.36 லட்சம் விவசாய மின்சார இணைப்புகளும், 9.45 குடிசை வீடுகளுக்கு மின் இணைப்புகள் உள்ளது .தற்போது இந்த இலவச மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்த அவசியம் இல்லை, தற்பொழுது இரண்டு லட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது இலவச மின்சாரம் என்பது மீட்டர் பொருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை தற்போது மீட்டர் பொறுத்தும் பணிக்கு காரணம் கேட்டால் மத்திய அரசு என்று மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள். எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கிறபோது  இதே அழுத்தம் மத்திய அரசிலே கொடுக்கப்பட்டது 


இந்த பணி நடைபெறவில்லை தற்போது இதுவரை இரண்டு லட்சம் விவசாயிகளுடைய இலவச மின்சாரத்திற்கு மீட்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மீதி 30 லட்சம் மேறப்பட்ட இணைப்பிற்கு நிதி ஆதாரத்தை வைத்து தள்ளி வைத்துள்ளனர். இந்த பேராபத்து தமிழக விவசாய இடத்தில் சூழ்ந்து  அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அச்சத்தை போக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசு இருக்கிறது.


மத்திய அரசின் மீது பழி போட்டுவிட்டு  திமுக அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. விவசாயிகளை வயிற்றில் அடிக்கிற வகையில் தான் இந்த அறிவிப்பு இருக்கிறது. இது குறித்து, உரிய விளக்கத்தை தமிழக அரசு விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாநில அம்மாவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்டப் பொருளாளர் திருப்பதி, மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சவர்ணம், கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச்  செயலாளர் கொரிய கணேசன், வாடிப்பட்டி பேரூர்  செயலாளர் அசோக், வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, வக்கீல் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad