சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 28 April 2023

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.


சோழவந்தான் அருகே, விக்ரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சிஅம்மன்கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. ஆச்சாரியார் ரிஷிகேசன்சிவன் தலைமையில், சிவாச்சாரியார்கள் நான்கு கால யாக பூஜை, கணபதி ஹோமம்  உள்ளிட்ட பூஜைகள் நடத்தது. இதை அடுத்து, நான்காம் காலையாக பூஜையுடன் கடம் கோவிலை சுற்றி வலம் வந்தது.

சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது, வானத்தில் கருடன் கூட்டமாக வட்டமிட்டது, கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். இதை தொடர்ந்து, பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைஆராதனைகள் நடந்தது. மேக்கிழார்பட்டி, அம்மாபட்டி, குரும்பபட்டி சார்ந்த நல்லகுட்டிவகையறா, ஆண்டிதேவர் வகையறா, எட்டூர்கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

இதில், முன்னாள் எம்எல்ஏ கதிரவன்,முன்னாள் சேர்மன் எல்எஸ் இளங்கோ, செல்லம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் கவிதாராஜா, மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி,விக்கிரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் கலியுகநாதன், பி.டி. மோகன் உள்பட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விக்கிரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.


இதேபோல், சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாச்சியபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது. இதில், வரதராஜபண்டிட்ஜ சிவாச்சாரியார்கள் முதல் கால யாக பூஜை நடத்தினர். இதையடுத்து நேற்று காலை மஹா பூர்ணாஹுதி பூஜை செய்து கடம் புறப்பாடானது. தொடர்ந்து, பாராயணம் படித்து வேதமந்திரங்கள் முழங்க  கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதையடுத்து, பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். கிராம கமிட்டியாளர்கள்‌ ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad