மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பழனி குமார், காமாட்சி, ராமசாமி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, நகர தலைவர் சவுந்தரபாண்டி, வட்டார தலைவர்கள் முருகேசன், கணேசன், சற்குணம், மணிகண்டன், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் சரவண பகவான், நகரச் செயலாளர் ராஜா தேசிங் மற்றும் கட்சி நிர்வாகிகள் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத் துக்கு ஊர்வலமாக வந்தனர்.

இதையும் படியுங்கள்: போலீசார் சார்பில் நீர்மோர் பந்தல் ரெயில்நிலையம் வந்த அவர்களை போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் தடுத்து நிறுத்தி, ரெயில் மறியல் நடத்த அனுமதி இல்லை என கூறி கலைந்து செல்லுங்கள் என்றார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷ மிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கி ரஸ் கட்சியினரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment