ரூ.11½ லட்சம் மோசடி செய்த ராணுவ வீரர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 16 April 2023

ரூ.11½ லட்சம் மோசடி செய்த ராணுவ வீரர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்ைத சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது கப்பலூரில் ஐ.ஓ.சி. நிறுவனத்தில் பணி யாற்றி வருகிறார். இவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்டுகுளத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது வெளிநாட்டு நிறு வனத்தில் முதலீடு செய்தால் சில மாதங்களில் இருமடங்கு தொகை கிடைக்கும் என சிவக்குமார் கூறினார். 

இதனை நம்பி பல தவணைகளில் ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்தை சிவக்குமா ரிடம் கொடுத்தேன். பல மாதங்கள் ஆனபின்பும் பணம் கைக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது மோசடி என தெரியவந்தது. இதையடுத்து பணத்ைத திரும்பித்தருமாறு சிவக்குமா ரிடம் கேட்டேன்.ஆனால் அவர் பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். எனவே உரிய நடவடிக்ை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படை யில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad