அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணி தனித்து போட்டியிட வேண்டும். இல்லையென்றால், பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இது தொடர்பாக, பாரதிய ஜனதா மேலிடத்துக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்பது. மதுரை பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக, ஏற்கனவே, மாநில தலைமைக்கு கோரிக்கை விடுத்து உள்ளோம்.

மதுரை மாநகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணிக்கு 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறப்படுகிறது. இதற்கான ஆடியோ எங்களிடம் வந்து உள்ளது. அதேபோல, குடிநீர் இணைப்புக்கு 50 ஆயிரம் ரூபாயும், குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய 10 ஆயிரம் ரூபாயும் லஞ்சம் பெறப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நடந்தேறி உள்ள ஊழல் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறோம்.
கூடிய விரைவில், இது பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடப்படும். தமிழகத்தில் 75 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள், போட்டி போட்டிக்கொண்டு ஊழல் செய்து தங்களை வளர்த்துக் கொண்டன. அண்ணாமலை திமுக நிர்வாகிகளின் ஊழல் பட்டியலை வெளியிட்டு உள்ளார். அதனை திருப்புவதற்காக, தேவையற்ற விவரங்களை திமுக பெரிதுபடுத்தி வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் பதவிக்கு வெற்றிடம் நிலவி வருகிறது. அதனை நிரப்புவதற்காக அண்ணாமலை வந்து உள்ளார்.
சூரியன் சுட்டு எரித்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக இலைகள் உதிர்ந்து வருகின்றன. கூடிய விரைவில் மழை பெய்யும். அப்போது தமிழகத்தில் நிச்சயமாக தாமரை மலரும்", இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

No comments:
Post a Comment