மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில், கப்பலூர் சிட்கோ பஸ் நிறுத்தம் முன்பு கோடைகால நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் -முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.
திருமங்கல ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம் தமிழழகன், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், வரவேற்றார்கள். , மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ஆர்.பி.உதயகுமார் ஒன்றிய செயலாளர் அன்பழகனிடம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை ஒன்றே கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம் செய்திருந்தார்.

No comments:
Post a Comment