15.பி மேட்டுப்பட்டி, ஸ்ரீபுரம் ராஜேஷ் நகர் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 9 April 2023

15.பி மேட்டுப்பட்டி, ஸ்ரீபுரம் ராஜேஷ் நகர் பகுதி மக்கள் திடீர் சாலை மறியல்.


மதுரை மாவட்டம்,  அலங்காநல்லூர் அருகே உள்ள 15.பி மேட்டுப்பட்டி   ஊராட்சி பகுதியில், உள்ள ஸ்ரீபுரம் ராஜேஷ் நகர் பகுதி மக்கள் அப்பகுதியில் அனைத்து பஸ்களும் நின்று போக வேண்டி பலமுறை  போக்குவரத்து துறைக்கு தெரிவித்தும்  பலமுறை மனு கொடுத்தும் இல்லை இதனைத் தொடர்ந்து, இன்று அப்பகுதி மக்கள் 50 க்கு மேற்பட்டோர் அலங்காநல்லூர் ஊமச்சிகுளம் சாலையில், சாலை மறியல் செய்தனர். 

தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர் தீபாநந்தினி மயில்வீரன் பேச்சுவார்த்தை நடத்தி ,விரைவில் பஸ் நின்று செல்ல வழிவகை செய்யப்படும் என்று உறுதி கூறியதன் பின்பு, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad