போலீஸ் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 9 April 2023

போலீஸ் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.


மதுரை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர், ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 319 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 84 மனுக்கள் தொடர்பாக விசாரணை நிலுவையில் உள்ளது. ஊமச்சிகுளத்தில் 33 மனுக்கள் பெறப்பட்டதில், 19 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 

திருமங்கலத்தில் 50 மனுக்கள் பெறப்பட்டதில் 46 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. உசிலம்பட்டியில் 59 மனுக்கள் பெறப்பட்டதில் 45 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. சமயநல்லூரில் 122 மனுக்கள் பெறப்பட்டதில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பேரையூர், மேலூரில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad