
குறிப்பாக, இரவு நேரத்தில் சிகிச்சைக்கு வருபவர்களை மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து வருவதாகவும், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி காலையில் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு திருப்பி அனுப்பப் படுவதாகவும், இதனால், கிராமத்தில் உள்ள ஏழை எளிய பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தனியார் மருத்துவமனை நோக்கி அவர்கள் செல்ல மறைமுக ஆதரவாக இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, மாவட்ட அலுவலர், தலைமை மருத்துவர் அலுவலர் நேரில் விசாரணை செய்து முறையாக சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். மேலும், மருந்து மாத்திரைகளை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மருத்துவத்துறை இணை இயக்குநர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

No comments:
Post a Comment