மதுரையை தொழில் நகரமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் - பாஜக மாநில பொது செயலாளர் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 17 April 2023

மதுரையை தொழில் நகரமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் - பாஜக மாநில பொது செயலாளர் கோரிக்கை.

மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும், என்று பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சியர் அணிஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- வரலாற்று சிறப்பு மிக்க பழமையான நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கென்று பல தனிசிறப்புகள் உள்ளது. அதில் தூங்கா நகரம், கோயில் நகரம், நான் மாட கூடல், கூடல் மாநகரம் என்றும் பல பெயிர்களில் அழைக்கிறது. 


அந்த வரிசையில், மதுரைஒரு தொழில் நகரமாகவும் அழைக்கபட வேண்டும் என்ற நோக்கில் மனு சமர்ப்பிக்கிறேன். மதுரையில், மிகப்பெரிய தொழில்சாலைகளோ, மிகப்பெரிய  தொழில் நிறுவனங்கள் என்று சொல்லும்படியாக  எந்த ஒரு பெரிய நிறுவனங்களும்  அமையவில்லை. இதனால், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் பலர் வேலைதேடி சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற தொழில் நகரங்களை நோக்கி அதிகமாக செல்கின்றனர்.

இன்னும் ஒரு சில ஆண்டுகளில்,  மதுரை உள்கட்ட மைப்பு அமையபெற்ற நகரமாக உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மதுரையை ஒரு தொழில் நகரமாக மாற்றும் வண்ணம் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.


தற்பொழுது, தமிழக அரசால் மாட்டுதாவணியில் அமைய இருக்கும் டைட்டல்  பார்க்  இதற்க்கு முந்தையே தி.மு.க ஆட்சியின் போது  தகவல் தொழிநுட்ப பூங்காகென்று  ஒதுக்கபட்டு அடிக்கல் நாட்டபட்ட வடபழஞ்சியில் அமைக்கும்மாறு கேட்டுகொண்டேன். அவ்வாறு, அப்பகுதியில் டைட்டல் பார்க்க அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அப்பகுதிகளில், வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும்.  


அதே போல், மதுரையே சுற்றி உள்ள அனைத்து  மாவட்டங்களிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி கொண்டு இருக்கின்றனர். மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட்குவாரி களும் தடைசெய்யபட்டுள்ளது. இதனால், மேலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கிரானைட் குவாரி  செயல்படுகிறது. ஆனால், அதன் அருகில்  மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரைனைட் குவாரிகள் இயங்கவில்லை என்பது மிகவும் வருந்தக்கதாக உள்ளது.

 

அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை  எடுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  உடன், மதுரை மேற்கு மாவட்ட த்தலைவர் சசிக்குமார், ஊடகபிரிவு கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் ஓ.பி.சிஅணி மாநில துணைத் தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி, வழக்கறிஞர் ரவிந்திரன், வேல்முருகன்,வெற்றி  கண்ணன், காளிதாஸ் கருப்பையா, சதீஷ், சோலைமணிகண்டன் உட்பட பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad