மதுரையில் மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபர்; போலீசார் விசாரணை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 8 April 2023

மதுரையில் மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபர்; போலீசார் விசாரணை.


மதுரை  தனியார் ட்ராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கார் ஓட்டுநரக பணியில் சேர்ந்த தங்கமணி(37). என்பவர் , நண்பகலில் எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் அதிவேகமாக சென்று முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தை மோதி விட்டு, தொடர்ந்து மாநகராட்சி குப்பை லாரியில் பின்பக்கம் பலமாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. 


இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்து சம்பவத்தில் இரண்டு பேர் பலத்த காயங்கள் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்துள்ளனர். காரை ஓட்டி வந்த தங்கமணி ,  ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஆட்டோவில் மோதியுள்ளார்.  இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை கண்டித்துள்ளனர். 


இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கமணி, இரவு முழுவதும் மது அருந்திவிட்டு இன்று ஆட்டோ ஓட்டுநர்களை தாக்க புறப்பட்டுச் சென்ற நிலையில், இந்த விபத்து ஏற்படுத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, சம்பவம் குறித்து  திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad