பேரிகேட் மீது அதிவேகமாக வந்த டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியனார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 8 April 2023

பேரிகேட் மீது அதிவேகமாக வந்த டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியனார்.


பேரிகேட் மீது அதிவேகமாக வந்த டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியனார். மதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார் (வயது 20). இவர், பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

திங்கட்கிழமை நடைபெறும் தேர்விற்காக ஹால் டிக்கெட் வாங்கிவிட்டு, அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சிவா என்ற உடன் படிக்கும் நண்பரை டூவீலரில் ஏற்றிக்கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை ஈச்சனேரி பகுதியில், அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவே போடப்பட்டுள்ள பேரிகேட்டின் மீது மோதி நிலைத்திடுமாறு மோதி கீழே விழுந்ததில், சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் உயிரிழந்தார்.


உடன் வந்த, சிவா காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad