மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் செக்கானூரணியில். உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் அவைத்தலைவர் கணேசன் ஒன்றிய செயலாளர் தனபாண்டியன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், தொகுதி பொறுப்பாளர் ராமர் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பான முறையில் கொண்டாடுவது பாகமுகவர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகாக, அதிகளவிலான உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து பேசினர்.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசும் போது அதிக உறுப்பினர்களைக் சேர்க்கும் ஒன்றிய செயலாளர்களுக்கு 5 பவுன் தங்க நகை வழங்கபடும் மற்றும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கும் ஒன்றியத்திற்கு 15 பவுன் தங்கச் செயின் வழங்கப்படும் என்று பேசி கட்சியினரை உற்சாகமூட்டினார்.
இக்கூட்டத்தில் நகர செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார், ராமமூர்த்தி, திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத் தலைவர் இந்திரா ஜெயக்குமார், உசிலை சிவா, மாவட்ட பிரதிநிதி தனிக்கொடி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன்,மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், ஒன்றிய பொருளாளர் மொக்கராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் முத்துப்பாண்டி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment