இது தவிர 52 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ள னர். அடுத்தபடியாக கடந்த 3 மாத காலத்தில் 265 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதன்படி மதுரை மாவட்டத்தில் 31, விருது நகர்-26, திண்டுக்கல்-30, தேனி-41, ராமநாதபுரம்-23, சிவகங்கை-10, நெல்லை-24, தென்காசி-20, தூத்துக் குடி-25, கன்னியாகுமரி-24, நெல்லை மாநகர் -11 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 2,450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதில் தொடர்பு உடைய 494 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தென்மண்டலத்தில் உள்ள பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கஞ்சா மற்றும் போதை பொருட் களுக்கு எதிராக விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கஞ்சாவிற்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை கள் தொடரும் என்று தென் மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment