அவர்கள் தெற்குவாசல் பாண்டிய வெள்ளாளர் தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சையது இப்ராஹிம் (வயது23), சோலை அழகுபுரம் குருசாமி மகன் சசிகுமார்(18), ஒத்தப்பட்டி காட்டு நாயக்கர் தெரு தினகரன் மகன் சுந்தரபாண்டி(19) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய எண்ணூர் வள்ளுவர் நகர், மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணமூர்த்தியை தேடி வருகின்றனர். தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார், ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.

ரைபிள் கிளப் அருகே 7 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதற்கிடையே ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்களிடம் போலீசார் சோதனை செய்தபோது 830 கிலோ குட்கா, 7 செல்போன்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசா ரித்தனர். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சித்தூர் காசிராமன்(28), தர்மபுரி மாவட்டம், நாகமரத்துபள்ளம் விக்ரம் ( 35), தர்மபுரி சித்தநல்லி தயாநிதி (32), சிங்கம்புணரி சுந்தரம் நகர், கதிரவன் (42), சிவகங்கை மாவட்டம், மணப்பட்டி வெள்ளைச்சாமி ( 42), திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிப்பட்டி, மாரியம்மன் கோவில் தெரு சக்திவேல் மகன் ஹரிஷ்பாபு (20) என்பது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பெங்களூர் கைலாஷ் குமாரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment