கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 25 March 2023

கலைக்கப்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு தற்போது கலைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நெசவாளர்களுக்கு நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலுவைத்தொகை உள்ளன. நிலுவைத்தொகையை இந்த செய்தி வெளியிடப்பட்ட 15 தினங்களுக்குள் அலுவலக நேரத்தில் 29, கக்கன் தெரு, செனாய் நகர், மதுரை-20 என்ற முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் (சங்க நெசவாளர் அட்டை மற்றும் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு ஒளிநகல்) கைத்தறி அலுவலர்/கலைத்தல் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட பயனாளிகளிடம் இருந்து உரிய கோரிக்கைகள் வராத பட்சத்தில் நிலு வையில் உள்ள தொகைகள் அனைத்தும் அரசுக்கு மீள சமர்ப்பிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு மேற்கண்ட முகவரியில் இயங்கி வரும் கைத்தறி துறை உதவி இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்.0452-2535669-க்கு தொடர்பு கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


- திருமங்கலம் செய்தியாளர் வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad