மதுரை, திருமங்கலத்தில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 25 March 2023

மதுரை, திருமங்கலத்தில் காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மதுரை பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரசார் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிப்பாளையம் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.மாவட்டத்தலைவர் கார்த்திகேயன், முன்னாள் நியமனக்குழுத்தலைவர் சிலுவை,செய்யது பாபு, பால் ஜோசப் உள்ளிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார் கோஷம் எழுப்பினர். 

திருமங்கலத்தில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். இதேபோன்று திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் நகர தலைவர் சவுந்தரபாண்டி, மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிகுமார், வட்டார தலைவர்கள் காசிநாதன், முருகேசன், மகளிரணி பிரவீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad