தொழிலாளி-வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 25 March 2023

தொழிலாளி-வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கருவேலம்பட்டியை சேர்ந்தவர் காசிகு மார்(வயது 35), தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். 

நேற்று காசிகுமார் மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியுடன் வீட்டுக்கு வந்த காசிகுமார், பூச்சிமருந்தை குடித்து மயங்கினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே காசிகுமார் இறந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் சரவணன்(32). இவரும் கல்லுப்பட்டியை சேர்ந்த அனிதா(30) என்பவரும் கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமங்கலம் ஜவகர்நகர் பகுதியில் வசித்து வந்தனர். அனிதா மதுரை ஐகோர்ட்டில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரவணன் நேற்று மதியம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். 


மாலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அனிதா கணவர் தூங்கி இருப்பார் என நினைத்து விட்டார். ஆனால் இரவு 11 மணியளவிலும் சரவணன் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்து பார்த்தபோது விஷம் குடித்தது தெரியவந்தது. உடனே அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்தபோது சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


- திருமங்கலம் செய்தியாளர் R.வினோத்பாபு

No comments:

Post a Comment

Post Top Ad