இதில், 4 கால யாக பூஜையுடன் கணபதி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், விநாயகர் பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகளை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி காசி, கங்கை, ராமேஸ்வரம், அழகர்கோவில், திருச்செந்தூர், உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வானத்தில் கருடன் வட்டமிட மேல தாளம் முழங்க கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகமும், தீபாரதனைகளும் நடந்தது. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ பாலமுருகன்சாமி (எ) ஸ்ரீ ஆண்டிச்சாமி, கோவில் பங்காளிகள் மற்றும் அம்பலத்தடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment