மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டியில், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக விலைவாசி வியர்வை கண்டித்தும், இந்திய தேசிய காங்கிரஸ் ராகுல் காந்தி கைதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை முறையாக பயன்படுத்த கோரியும், கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஒன்றிய செயலாளர் ராமன் தலைமை வகித்தார். மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலாளர் சேது சிறப்புரையாற்றினார். முருகன் நன்றி உரையாற்றினார். ஜெயக்குமார், பாண்டி, கார்த்திகேயன், புது மணி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment