எப்பவுமே எங்கேயுமே ஒரு மனுஷன் ஒடுக்கப்படுவதை, நசுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ரோகிணி தியேட்டர் தீண்டாமை விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சுளீர்! - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 31 March 2023

எப்பவுமே எங்கேயுமே ஒரு மனுஷன் ஒடுக்கப்படுவதை, நசுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ரோகிணி தியேட்டர் தீண்டாமை விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சுளீர்!

 


சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதையொட்டு இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கு தான் திரையிடப்பட்டது. படம் பார்க்க அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் சிம்புவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதையடுத்து காலை 8 மணிக்கு பத்து தல படத்தின் FDFS திரையிடப்பட்டது. 

இதைப்பார்க்க பெண்களும் அதிகளவில் வந்திருந்தனர்.அந்த வகையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மூன்று பேரை தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இத்தனைக்கும் அந்த 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி வந்திருந்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிம்பு ரசிகர்கள் இதனை வீடியோவாக எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.


சென்னை போன்ற வளர்ந்து வரும் நகரத்தில் இப்படி ஒரு தீண்டாமை சம்பவம் நடந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த தியேட்டர் ஊழியரை திட்டித்தீர்த்து வருகின்றனர். படம் பார்க்க ஆசையோடு வந்தவர்களை இப்படி கொடுமைப்படுத்தியவர்கள் மீது எடுக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பி வருகின்றனர்.


இந்த நிலையில் மதுரையில் முதல்வர் புகைப்பட கண்காட்சியை காண வந்த நடிகர் விஜய் சேதுபதி  இது குறித்து தெரிவித்த கருத்தில் எப்பவுமே எங்கேயுமே ஒரு மனுஷன் ஒடுக்கப்படுவதை, நசுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்திட படைக்கப்பட்டவர்கள் எந்த வகையில் வேற்றுமையை கற்பித்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad