கள்ளிக்குடி அருகே ராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் 29 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மூன்று பேர் கைது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 29 March 2023

கள்ளிக்குடி அருகே ராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவியிடம் 29 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மூன்று பேர் கைது.


மதுரை திருமங்கலம் அடுத்துள்ள கள்ளிக்குடி தாலுக்கா குராயூர் பகுதியில் அய்யனார் என்ற ராணுவ வீரர் வீட்டில் தனியாக இருந்த மனைவி கௌசல்யாவிடம் கடந்த 23-ஆம் மர்மநபர்கள் வீட்டில் புகுந்து கத்தியை காட்டி 29 பவுன் கொள்ளை அடித்த சம்பவத்தில், 

கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் திருமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன், பாலாஜி, கள்ளிக்குடி குராயூர் சேர்ந்த பிலாவடி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை கொண்டதில் மேலும் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய தெரிய வந்தது.


எனவே அவர்களிடம் இருந்து பல்வேறு திருட்டுச் சம்பவங்களிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 47 அரை பவுன் தங்க நகை பறிந்து செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad