ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி ,பெண்ணிடம் டூப்ளிகேட் ஏடிஎம்கார்டை கொடுத்து பிரபல நகை கடையில் தங்க நகைகள் ஷாப்பிங் செய்த திருடன். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 29 March 2023

ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி ,பெண்ணிடம் டூப்ளிகேட் ஏடிஎம்கார்டை கொடுத்து பிரபல நகை கடையில் தங்க நகைகள் ஷாப்பிங் செய்த திருடன்.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் செயல்பட்டுவரும் பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஏடிஎம்- ல் பணம் எடுக்க வருபவர்களிடம் நூதனமாக ஏடிஎம், கார்டை மாற்றி பணத்தை திருடி சென்ற வாலிபரை போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகிறார்கள்.

மதுரை, வாடிப்பட்டியை சேர்ந்த ஜெயா என்ற இளம்பெண் தனது மாமியார் வங்கி கணக்கில் பணம் எடுக்க ஏடிஎம் வந்தபோது ,அங்கே இருந்த இளைஞர் ஒருவர் பணம் எடுத்து தருவதாக கூறி, அவர்களை திசைதிருப்பி பின் நம்பரை தெரிந்துகொண்டு பழைய ஏடிஎம் கார்டை மாற்றிகொடுத்துவிட்டு, பணம் இல்லை என கூறி அவர்களை அனுப்பிவிட்டு, மீண்டும் வந்து அவர்களது ஏடிஎம்  கார்டை பயன்படுத்தி, வங்கிகணக்கில் உள்ள   பணத்தை எடுத்து சென்றுள்ளார்.


பின்னர், பெண்னின் செல்போனுக்கு வந்த குருஞ்செய்தியில் பணம் எடுத்ததாக வந்ததையடுத்து ஏடிஎம் கார்டை சரிபார்த்தபோது, அது போலியான ஏடிஎம் கார்டு என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த அதிர்ச்சியும் அந்த பெண்னுக்கு காத்திருந்தது. அந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, மதுரையிலுள்ள  பிரபல நகை கடையான தங்கமயில் ஜூவல்லரியில் ரூ.50 ஆயிரத்திற்கு நகை ஷாப்பிங் செய்ததாக மீண்டும் குறுஞ்செய்தி வந்தது.


உஷாரான இளம்பெண், ஜெயா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வங்கி ஏடிஎம் சென்டரில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி,  அதன் அடிப்படையில் நூதன முறையில் மோசடி செய்த திருடனை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad