திருமங்கலம் அருகே மருத காளியம்மன் கோவிலுக்கு தே.மு.தி.க சார்பாக 108 பால்குடம் எடுத்து நிர்வாகிகள் வழிபாடு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday, 28 March 2023

திருமங்கலம் அருகே மருத காளியம்மன் கோவிலுக்கு தே.மு.தி.க சார்பாக 108 பால்குடம் எடுத்து நிர்வாகிகள் வழிபாடு.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி கிராமத்தில் தேமுதிக சார்பாக கிராமத்தில் உள்ள மருதகாளியம்மக்கு கேப்டன் விரைவாக குணமடைய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், உச்சப்பட்டி கிராமத்தில் உள்ள விநாயகர் சிலை முன்பு தேமுதிக மகளிர் அணியினர் சுமார் 108 பேர் பால்குடம் எடுத்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று மருத காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர், இதில் தேவராட்டமும் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வினை திருமங்கலம் தேமுதிக ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது மேலும் பால்குடம் எடுத்த பக்தர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகளான செல்லமணி ராஜசேகர் கல்யாணசுந்தரம் அழகர்சாமி வரதராஜன் சுரேஷ் கண்ணன் சூரையா சதீஷ்குமார் ரங்கசாமி அஜய் விஜய பாரதி நவீன் குமார் மற்றும் கழக நிர்வாகிகளும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு மருத காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad