திருப்பரங்குன்றம் யூனியன் கவுன்சிலர் தென்பழஞ்சி சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் தென்பாண்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு மொழி தலைமையில் மாணவர்கள் 130 பேர், வேடர் புளியங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முத்துப்பிள்ளை, சத்தியபாமா ஆகியோர் தலைமையில் 230 மாணவர்கள் 4 பஸ்களில் கீழடிக்கு சுற்றுலா சென்றனர்.

அங்குள்ள தொல்லியல் அருங்காட்சியத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் திருப்பாலையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர். பகுதி அமைப்பாளர் சாரதி, ராஜா, நாகேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment