மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நடைபெறும் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்துள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்று வரும் மாற்றத்தினால் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவம் மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
இதில் திருமங்கலம் சுற்று வட்டார கள்ளிக்குடி கல்லுப்பட்டி கிராமங்களில் இருந்து அதிக அளவிலான மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்றனர். இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமினை மதுரை மாவட்ட ஆட்சியர் அணீஸ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது ஏற்படும் குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.
No comments:
Post a Comment