மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்கா முன்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் சட்ட விதிப்படி அந்தந்த கிராமத்தில் தங்கி வேலை பார்க்க உத்தரவிடக்கோரி மாவட்ட நிர்வாகத்தையும் வட்டாட்சியர் நிர்வாகத்தையும் வலியுறுத்தி மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் விழிப்புணர்வு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநில ஆலோசகர் உசிலம்பட்டி லட்சுமணன் மாநில அமைப்பாளர் ரமேஷ் விருதுநகர் மாவட்ட செயலாளர் சபரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரையூர் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment