குப்பைத்தொட்டியை தவிர மற்ற இடங்களில் குப்பைகள் மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் நோய் தொற்று ஒழிக்க முடியாது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 6 October 2022

குப்பைத்தொட்டியை தவிர மற்ற இடங்களில் குப்பைகள் மக்களாய் பார்த்து திருந்தாவிட்டால் நோய் தொற்று ஒழிக்க முடியாது.

மதுரை காமராஜபுரம் பகுதியில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனை இப்பகுதி சுற்று வட்டார பொது மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருந்து வருகிறது.


நல்ல காட்டோட்டமான அமைதியான சூழலில் உள்ள இந்த மருத்துவமனை இப்பகுதி மக்களுக்கு பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், மருத்துவமனை வளவ சுற்றுச்சூழல் அருகே குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைத் தொட்டியில் , பொதுமக்கள் யாரும் குப்பையை குப்பை தொட்டியில் போடாமல் சாலையில் வீசிவிட்டு செல்கின்றனர்.


இதனால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நோயோடு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் ஒரு புது நோயை வாங்கிச் செல்லும் அவல நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், குப்பையில் அதிகம் நெகிழி கழிவுகள் அதிகம் இருப்பதால் ஆடு மாடுகள் நெகிழி கழிவுகளை உட்கொள்கிறது.


எனவே, மாநகராட்சி நிர்வாகம் மருத்துவமனை நிர்வாகம் தொகுதி நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் மீது அக்கடி எடுத்து சுகாதாரத்தை பாதுகாக்கவும் நோய் நொடி இல்லாமல் வாழ வழிவகை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த மருத்துவமனையின் பின்புறம் அரசு மண்டல புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad